139 ஆவது பிறந்த நாள்: சுதந்திரப் போராட்ட வீரர் - பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் சிலைக்கு மலர் வணக்கம்
5 Jun 2026, 8:16 pm
<p><strong>139 ஆவது பிறந்த நாள்: சுதந்திரப் போராட்ட வீரர் - பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் சிலைக்கு மலர் வணக்கம்</strong></p><p>மதுரை, ஜூன் 5- சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிக் காகப் பாடுபட்ட தலைவருமான பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் 139 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 5 அன்று மதுரை யானைக்கல் அருகே அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. </p><p>இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவர் பி. ரசூல் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், சிறு பான்மை நலக்குழு மாநிலக்குழு உறுப்பினர் அருட்தந்தை பெனடிக் பர்ணபாஸ், அருட் தந்தை அருள், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் அருட்தந்தை பால் பிரிட்டோ, மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் இல்லத்தின் பல் சமய உரையாடல் குழு செயலாளர் அருட்தந்தை பி.வி. சூசை, அருட்தந்தை விஜய் பாபு, அருட்தந்தை பிரின்ஸ், அருட்தந்தை அமல்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் எம். அவ்தா காதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரமேஷ், மத்திய- 2 பகுதி குழு செய லாளர் பி. கோபிநாத் , மாவட்டச் செயலாளர் என். கணேசமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் எம். ஜான்சன், இந்திய தேசிய லீக் மாவட்டச் செயலாளர் என். முகமது அலி உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரி யாதை செலுத்தினர்.மாவட்டத் துணைத் தலை வர் பி. முகமது அலி நன்றி கூறினார்.</p>
