பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சி கிருஷ்ணகிரி
17 Dec 2025, 4:11 pm
<p>பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சி கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2025-26 ன் கீழ் 4 கோடியே 39 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். பர்கூர் பேருராட்சி தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் குமார்,பேரூராட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.</p>
