பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து
13 May 2026, 1:50 am
<p><strong>பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து</strong></p><p>மேட்டுப்பாளையம், மே 12- கோடையில் பெய்யும் கனமழை காரணமாக முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பரளிக்காடு சூழல் சுற்றுலா தற் காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறி வித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு என்னுமிடத்தில் பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியில் வனத்துறை சார்பில் பரளிக் காடு சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. பரிசல் பயணம் முக்கிய இடம் பிடிக்கும் இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து பங்கேற்று வருகின்றனர். உள்ளூரை சேர்ந்த பழங்குடியின மக்களோடு இணைந்து நடத்தப்பட்டு வரும் இயற்கை எழில் மிகுந்த இந்த பரளிக் காடு சூழல் சுற்றுலா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது கோடை விடுமுறை என்ப தால் இந்த மாதம் முழுவதும் இயக்கப்படும் என்று வனத்துறை சார்பில் அறிவிந்திருந்தது. இந்நிலையில், மேற்குதொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக பரளிக்காடு சூழல் சுற்றுலா மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.</p>
