கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
15 Nov 2025, 4:09 pm

பிஎஸ்என்எல் காப்பர் ஒயர்கள் திருட்டு: 8 பேர் கைது

நாமக்கல், நவ.15- திருச்செங்கோட்டில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான காப்பர் கேபிள் ஒயர்களை திருடியதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே, கடந்த நவம்பர் 9-ஆம் தேதி இரவு சிலர் குழிகள் தோண்டிக் கொண்டிருந்தனர். பொதுமக்களி டம் விசாரித்தபோது, ஏர்டெல் நிறுவனத்திற்காக கேபிள் பதிக்க குழி தோண்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர். நள்ளிர வில் குழி தோண்டுவது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், நவம் பர் 11 அன்று மீண்டும் குழி தோண்ட வந்தபோது, பொது மக்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதியிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, நவம்பர் 12-ஆம் தேதி மீண்டும் பொலிரோ வாகனத்தில் வந்த சிலர் குழி தோண்டிக் கொண்டிருப்பதை பிஎஸ்என்எல் நிறுவன இளநிலை பொறியாளர் தினேஷ் குமார் கண்டு, ஆய்வாளர் வளர்மதிக்குத் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஆய்வாளர் வளர்மதி தலைமையிலான போலீசார், அங்கிருந்தவர்க ளைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் ஏர்டெல் நிறுவனத்திற்காகக் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருவதும், அதற் கிடையே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காப்பர் ஒயர்களைத் திருடியதும் தெரியவந்தது. கைதான அனைவரும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அத்தனூர் பகுதி யில் தங்கியிருந்து இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த னர் என்றும் தெரிய வந்தது. சுமார் ரூ.1,27,500 மதிப்புள்ள காப்பர் ஒயர்களை திருடி, அத்தனூரில் உள்ள பழைய இரும்பு வியாபாரி ஒருவரிடம் கிலோ ரூ.190 என்ற விலைக்கு விற்று, அந்த பணத்தை எட்டு பேரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் பழைய இரும்புக்கடையில் இருந்த காப்பர் ஒயர்களை மீட்டு, திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட பொலிரோ வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளர் தினேஷ் குமாரின் புகாரின் பேரில், திருட்டுச் சம்பவத்தில் ஈடு பட்ட தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதி சந்தம்பட்டி கிராமத் தைச் சேர்ந்த மணிகண்டன் (29), அருண் (21), ரஞ்சித் (23), தெய்வம் (32), சின்னதுரை (27), மணிகண்டன் (19), சுரேஷ் மற்றும் மற்றொருவர் உட்பட எட்டு பேரையும் திருச்செங் கோடு போலீசார் கைது செய்தனர்.

குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சாலை மறியல்

ஈரோடு, நவ.15- சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஒன்றியம், தொப்பம் பாளையம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பவானிசாகர் குடிநீர் வடி கால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குடிநீா் விநியோகிக் கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி மக் கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளியன்று, சத்தியமங்கலம் - பவானிசாகர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பவ இடத் திற்கு வந்த தொப்பம்பாளையம் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது குடிநீர் வடிகால் வாரிய குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், பழைய குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட்க ளில் முடிவடையும். அதன்பின் சீரான குடிநீர் விநியோகிக் கப்படும் என்றனர். இதையேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கஞ்சா வளர்ப்பு: தந்தை, மகன் கைது

கோபி, நவ.15- பர்கூர் மலைக்கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டிருந்த தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பர்கூர், ஒன்னக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜடமாதன் (63). இவர் தனது மகனுடன் சேர்ந்து, அவர்களுக்கு சொந்தமான நிலத் தில் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில், ஜடமா தன் தோட்டத்தில் கஞ்சா செடியினை பயிரிட்டு வளர்த்து வருவதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் அவரது தோட்டத்தில் மதுவிலக்கு போலீ சார் சோதனை நடத்தியதில், சோளப்பயிருக்கு நடுவே 11 கஞ்சா செடி இருந்ததை கண்டறியப்பட்டது. இதைய டுத்து ஜடமாதன் மற்றும் அவரது மகன் கெம்பன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், 11 கஞ்சா செடி களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

பனிமூட்டத்துடன் மழை: குளிரால் மக்கள் அவதி

உதகை, நவ.15- உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்க ளில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால், அப்பகுதியில் பொதுமக்கள் கடுங்குளிரால் அவதியடைந்து வருகின்ற னர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் வட கிழக்கு பருவமழை துவங்கியது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிக ளில் கொட்டிய கனமழை காரணமாக பல் வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன; மண் சரிவுகள் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. மழை குறைந்த நிலையில் கடந்த 10 நாட்க ளுக்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தில் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுங் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில். தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்திலும் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. எதிரில் வரக்கூடிய வாகனங் களே தெரியாத அளவிற்கு கடுமையான பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக, குன்னூர்- மஞ்சூர் சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை உள்ளிட்ட மலைப்பாதைக ளில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை ஒளிரவிட்டபடியே மெதுவாக பயணித் தனர். பனிமூட்டத்துடன் சில நேரம் சில சம யம் இரவில் நல்ல மழை பொழிவு இருந் தது. தொடர்ந்து வெள்ளியன்று அதிகாலை உதகை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் பனிமூட்டமான காலநிலை நிலவியது. இதனால் கடுங்குளிர் நிலவியது. அதிகாலை யில் வேலைக்குச் செல்வோர் கடும் பாதிப் படைந்தனர்.

மதுக்கூடத்தில் தகராறு: மாவட்ட பாஜக செயலாளர் கைது

திருப்பூர், நவ.15- காங்கேயம் அருகே தனது சொந்த இடத்தில் மதுபானக்கூடத்தை வாட கைக்கு விட்டதில் ஏற்பட்ட பிரச்சனை யில் 10 பேர் கும்பலாக வந்து தாக்கு தல் நடத்தியது தொடர்பாக திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக செயலாளரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்த ஊதியூர் மேட்டுப்பாறை பகுதி யில் டாஸ்மாக் கடை உள்ளது. இதற்கு அருகிலேயே திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக செயலாளர் விஜயகுமார் என்ப வருக்கு சொந்தமான இடத்தில் மது பானக்கூடம் செயல்பட்டு வந்தது. இத னை திருப்பூரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர் வாடகைக்கு பேசி நடத்தி வரு கிறார். வாடகை தொடர்பாக இருவருக் கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயகுமார் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் மதுபானக் கூடத்துக்குள் வந்து, அங்கு வேலை செய்தவர்களை கட்டையால் தாக்கிய தாக கூறப்படுகிறது. இதில் அங்கு பணி யாற்றிய திருப்பூர், குமார் நகரைச் சேர்ந்த கார்த்திக், கருப்புசாமி உட்பட சிலர் காயமடைந்தனர். தொடர்ந்து, விஜயகுமார் தலைமையில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். தக ராறில் ஈடுபட்ட ஊதியூர் பங்காம்பாளை யம் சுரேஷ், திருப்பூர் மனோஜ்குமார் ஆகிய இருவரையும் ஊதியூர் போலீ சார் கைது செய்தனர். இந்நிலையில், சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலை யில், தப்பியோடிய பாஜக நிர்வாகி விஜயகுமாரை மைசூருவில் வைத்து ஊதியூர் போலீசார் சனியன்று கைது செய்தனர்.