காலிப் பணியிடங்களை நிரப்பிடுக
20 Dec 2025, 3:38 pm
<p>திருப்பூர், டிச. 20 – நீதித்துறையில் காலியாக இருக்கும் நீதித்துறை பணியாளர் இடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய வழக்கறிஞர் சங்க ஐந்தா வது மாவட்ட மாநாடு, திருப்பூர் வெள்ளியங் காடு தனியார் மண்டபத்தில், மூத்த வழக்கறி ஞர் கே.ஜனார்த்தனன் நினைவரங்கில் வெள் ளியன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் கே.சுப்பராயன் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கண்ணன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். ஸ்ரீநிதி வர வேற்றார். திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் பி.வி.பிரகாஷ், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் டி.சத்தியமூர்த்தி ஆகியோர் முன் னிலையில், வழக்கறிஞர் சங்க மாநிலச் செய லாளர் கே.பாண்டீஸ்வரி மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். திமுக வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் பார்த்திபன் மதிமுக வழக்கறி ஞர் அணி நிர்வாகி தமயந்தி கந்தசாமி உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் பி.மோகன் மாநாட்டு அறிக்கையையும், பொருளாளர் உதயசூரியன் வரவு செலவு அறிக்கையை யும் முன் வைத்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் சேகர், நவீன் மாநிலக்குழு உறுப்பினர் தமயந்தி, மாவட்டக்குழு உறுப்பி னர் வை.ஆனந்தன் ஆகியோர் தீர்மானங் களை முன்மொழிந்தனர். இதில் இ-பைலிங் முறைக்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யாமல் நடைமுறைப் படுத்துவதைக் கைவிட வேண்டும், ஏற் கெனவே இருக்கும் முறையை அனுமதிக்க வேண்டும். பெண் வழக்கறிஞர்களுக்கு மகப் பேறு கால உதவித் தொகை உள்பட அடிப் படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும், திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் முன்பாக போக்குவரத்து நெருக்கடி, விபத்து ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்து சிக் னல், போக்குவரத்துக் காவலர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனைதொடர்ந்து, இம்மாநாட்டில் சங் கத்தின் மாவட்டத் தலைவராக பி.மோகன், செயலாளராக ஏ.மணவாளன், பொருளாள ராக ஒ.உதயசூரியன், துணைத்தலைவர் களாக எஸ்.கண்ணன், எஸ்.பொன்ராம், எஸ். ஏ.தமயந்தி, இணைசெயலாளர்களாக கே. கோபாலகிருஷ்ணன், எஸ்.வினோத்குமார், ஏ.அமர்நாத் ஆகிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 19 பேர் மாவட்டக்குழு உறுப்பி னர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக, இணைச் செயலா ளர் எஸ்.வினோத்குமார் நன்றி கூறினார்.</p>
