உயர்நீதிமன்ற கிளையை புதுச்சேரியில் அமைக்க வேண்டும் வழக்கறிஞர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்
27 Feb 2026, 5:32 pm
<p><strong>உயர்நீதிமன்ற கிளையை புதுச்சேரியில் அமைக்க வேண்டும் வழக்கறிஞர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்</strong></p>
<p>புதுச்சேரி, பிப்.27- அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாவட்ட மாநாடு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ரமணன் தலைமை தாங்கினார். தோழர்கள் ஏ. ஆனந்த், ஆறுமுகம் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் சம்கிராணி மாநாட்டைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மூத்த வழக்கறிஞர்கள் குமரன், பரிமளம், கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநாட்டு வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் சரவணன் வாசித்தார். மாநாட்டின் நிறைவாக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் இளங்கோ பங்கேற்று பேசினார். சங்க நிர்வாகிகள் ஆனந்த், ஆறுமுகம், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட திரளான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். நிர்வாகிகள் தேர்வு புதுச்சேரி தலை வராக தக்ஷிணாமூர்த்தி, செயலாளராக சரவணன், பொருளாளராக ஆறுமுகம் உட்பட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை உடனடியாக அமைக்க வேண்டும். தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில், புதுச்சேரி மாநில வழக்கறிஞர்களுக்கு என தனி இட ஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.</p>
