பிஏபி வாய்க்கால் கரை உடைந்து கிராமத்துக்குள் புகுந்த தண்ணீர்
14 Nov 2025, 1:26 pm
<p><strong>பிஏபி வாய்க்கால் கரை உடைந்து கிராமத்துக்குள் புகுந்த தண்ணீர்</strong></p>
<p>திருப்பூர், நவ.14- பல்லடம் அருகே வாவி பாளையம் கிராமத்தில் பிஏபி பிரதான வாய்க்கால் உடைந்து கிராமத்துக்குள் ளும், பள்ளிக்கூடத்திற்குள் ளும் நீர் புகுந்ததால் அப்ப குதி மக்கள், மாணவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளா கினர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பல்லடம் அருகே வாவி பாளையம் பகுதியில் பிஏபி பிரதான வாய்க் காலில் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந் துவிடப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் வாவிபாளையம் கிராமப்பகுதியில் வியாழ னன்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ள மென கிராமத்திற்குள் புகுந்தது. இதைய டுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் நீர் வளத் துறையினர், வருவாய்த் துறையினர் அரசூர் பகுதி பிஏபி வாய்க்காலில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீரை திருப்பி விட்டனர். மேலும், திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணரே, மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், பல்லடம் வட்டாட்சியர் ராஜேஷ் உள்ளிட்டோர் வெள்ளியன்று பார்வையிட்டனர். இந்த வாய்க்கால் உடைப்பை ஒரு வாரத்தில் சீரமைத்து, மீண் டும் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று நீர்வ ளத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p> </p>
