பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை விளக்க கூட்டம்
6 Mar 2026, 3:17 pm
<p><strong>பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை விளக்க கூட்டம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச்.6- திருப்பூர் பனியன் தொழிலாளர்க ளுக்கு சம்பள உயர்வு பேச்சுவார்த்தை குறித்து விளக்க கூட்டம் வெள்ளி யன்று சிஐடியு மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்றது. திருப்பூர் பனியன் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு ஒப்பந்தம் முடிவ டைந்து, ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை 6 முறை உற்பத்தி யாளர்கள் சங்கங்களுடன் தொழிற்சங் கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள னர். இதில், சம்பள உயர்வு, பஞ்சப்படி போன்ற முக்கிய அம்சங்களில் சிறு முன்னேற்றங்கள் இருந்தாலும், ஒரு மித்த கருத்து ஏற்படாத காரணத்தினால், ஏழாவது கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 7 நடத்தப்பட உள்ளதாக தொழிற்சங்கத் தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிஐடியு பனியன் சங்க தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில் வெள்ளியன்று பனியன் தொழிலாளர்கள் சம்பள உயர்வு குறித்து நடைபெற்றுள்ள பேச்சுவார்த் தைகள் குறித்து விளக்கும் பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிஐடியு பொதுச்செயலாளர் ஜி. சம்பத், நடைபெற்றுள்ள பேச்சு வார்த்தை குறித்து விளக்கிப் பேசி னார். இதில் திரளான பனியன் தொழி லாளர்கள் பங்கேற்றனர்.</p>
