பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை இழுபறி: பிப்.16ல் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை
19 Jan 2026, 2:23 pm
<p><strong>பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை இழுபறி: பிப்.16ல் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை</strong></p>
<p>திருப்பூர், ஜன. 19 – திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு குறித்து ஆறாவது சுற்று இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை தொடர்ந்தது. எனவே அடுத்தக்கட்டப் பேச்சு வார்த்தை பிப்ரவரி 16ஆம் தேதி நடத்தப் படுகிறது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 2ஆம் தேதி அடுத்தக்கட்ட நிலைபாடு குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) அலுவலகத்தில் திங்களன்று பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை ஐந்து சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. கடைசியாக டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில், திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் சம்பள உயர்வு தருவதாக உற்பத்தியாளர் சங்கங் கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அதை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட் டன. இதையடுத்து ஆறாவது சுற்றுப் பேச்சு வார்த்தை ஜனவரி 19ஆம் தேதி நடத்துவ தென இருதரப்பு கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. அதன்படி, சைமா அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உற்பத்தி யாளர்கள் சங்கங்கள் தரப்பில் பிரேம் துரை சாமி, கே.எம்.சுப்பிரமணி, கோபாலகி ருஷ்ணன் (ஏற்றுமதியாளர் சங்கம்) சண்மு கசுந்தரம், தாமோதரன் (சைமா), சக்திவேல் (டீமா) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் ஜி.சம்பத், கே.உண்ணிகிருஷ்ணன் (சிஐடியு), செந்தில், சேகர் (ஏஐடியுசி), ராமகிருஷ்ணன், பால சுப்பிரமணியம் (எல்பிஎப்), வி.ஆர்.ஈஸ்வ ரன், சீனிவாசன் (ஐஎன்டியுசி), ஆர்.முத்து சாமி (எச்எம்எஸ்), கண்ணபிரான் (ஏடிபி), சக்திவேல் (எம்எல்எப்), சந்தானம், செந்தில் (பிஎம்எஸ்), மனோகரன் (டிடிஎம்எஸ்) உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் உற்பத்தியாளர் கள் தரப்பில், ஏற்கெனவே முன்மொழிந்த 20 சதவிகித சம்பள உயர்வே தருவதாக மீண்டும் கூறினர். பஞ்சப்படி ஏற்கெனவே இருக்கும் 14.50 பைசாவுடன் புள்ளிக்கு, 0.5 பைசா மட்டும் அதிகப்படுத்தித் தருவதாக கூறினர். இது தவிர மற்ற கோரிக்கைகள் குறித்து பேசலாம் என்று உற்பத்தியாளர்கள் தரப்பில் பிடிவா தமாக தெரிவித்தனர். எனினும் தொழிற்சங்கங்கள் 20 சதவிகித சம்பள உயர்வை ஏற்க முடியாது, இதை அதிகப்படுத்தி தர வேண்டும். அத்துடன் பஞ்சப்படியையும், வீட்டு வாடகைப் படியை யும் அதிகப்படுத்தி தர வேண்டும் என்று வலி யுறுத்தினர். தொழிலாளர்களின் சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகை உயர்வைப் பற்றி பேசாமல் உடன்பாடு காண இயலாது என்று உறுதியுடன் தெரிவித்துவிட்டனர். உற்பத்தியாளர்கள் தரப்பில் பிடிவாதம் பிடித்த நிலையில், தொழிற்சங்கங்கள் தரப் பில் கோரிக்கைகள் குறித்து உறுதியாக இருந் ததால் இன்றைய பேச்சுவார்த்தையில் உடன் பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து அடுத் தக்கட்டப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை குறித்து விரைவில் சுமூகத் தீர்வு காண உற்பத்தியாளர் தரப்பில் முன்வர வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதேசமயம் தொழிற்சங்கங் களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 2ஆம் தேதி ஏஐடியுசி அலுவலகத் தில் அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள் ளனர்.</p>
