முந்தய பக்கம்

பாலர் பூங்கா ஆலமரம்!

24 May 2026, 12:01 am
பாலர் பூங்கா ஆலமரம்!
<p><strong>பாலர் பூங்கா ஆலமரம்!</strong></p><p>ஆல மரத்தின் கிளையிலே ஆலம் விழுது தொங்குது! கால மெல்லாம் நிலைத்திட கனிவாய் மரத்தைத் தாங்குது! நல்ல காற்றை வீசுது நாளும் நிழலை அளிக்குது! இல்லா தவர்க்குத் தங்கிட இருக்க இடமும் கொடுக்குது! சுற்றுச் சூழல் காக்குது சூட்டை நீக்கித் தணிக்குது தொற்று நோயை விரட்டுது துன்பம் தன்னைப் போக்குது! குயில்கள் கூவிப் பாடுது குரங்குக் கூட்டம் தாவுது வெயிலைத் தாங்கி நிற்குது வியக்கும் வண்ணம் விரியுது! இதனின் விதையோ சிறியது இலைகள் பட்டை மருந்தது! உதவும் நல்ல குணத்திலே உயரும் உள்ளம் நலத்திலே! ஆலங் காயோ பழுத்திடும் அனைத்துப் பறவை உண்டிடும் ஆலம் பழமோ தீர்ந்திடின் அதனை விட்டுப் பறந்திடும்! ஆல மரத்தின் விழுதென அன்னை தந்தைத் தாங்கிடு! சோலை போலவர் வாழ்க்கை சொர்க்க மாக்கிப் போற்றிடு!</p>
Share
FacebookXWhatsAppTelegram