தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் ஒன்றிய அரசு அறிவிப்பு

23 Sept 2026, 8:51 pm
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் ஒன்றிய அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் ஒன்றிய அரசு அறிவிப்பு

செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை அறிவிக்கப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளை இணைக்கக் கூடாது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப்போராட் டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், செப்டம்பர் 26 நான் காவது சனிக்கிழமை வருவதாலும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வழக்கம் போல 2 நாட்கள் வங்கிகள் இயங்காது.

அதைத் தொடர்ந்து வங்கி ஊழியர் களின் போராட்டம் செப்டம்பர் 28ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனால், செப்டம்பர் 26 முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகளின் சேவைகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதனால் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை செப்டம்பர் 27ஆம் தேதி அனைத் துப் பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளும் வழக்கம்போல் இயங் கும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறை என்பதால், வரும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.