முந்தய பக்கம்

போராட்டத்தை முடக்க மோடி அரசு தீவிரம்3 நாள் வேலைநிறுத்தம்; வங்கி ஊழியர்கள் உறுதி!

23 Sept 2026, 11:03 pm
போராட்டத்தை முடக்க மோடி அரசு தீவிரம்3 நாள் வேலைநிறுத்தம்; வங்கி ஊழியர்கள் உறுதி!

போராட்டத்தை முடக்க மோடி அரசு தீவிரம்3 நாள் வேலைநிறுத்தம்; வங்கி ஊழியர்கள் உறுதி!

சென்னை, செப். 23 -5 நாள் வங்கிப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக செப்டம்பர் 28 முதல் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) அழைப்பு விடுத்துள்ளது.

ஒன்றிய தொழிலாளர் ஆணையர் முன் நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்தப் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சாதகமான முடிவை அரசு அறிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், 28-ஆம் தேதிக்கு முன் வார இறுதி விடுமுறையும் சேர்ந்து ஐந்து நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; 30-ஆம் தேதி அரையாண்டு கணக்கு முடிவு நாள் என்பதால் பணப் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க, டிஜிட்டல்/ஏ.டி.எம். சேவைகளைப் பயன்படுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

இதற்கிடையே, இந்தப் போராட்டத்தை முடக்கும் வகையில் செப்டம்பர் 27 (ஞாயிறு) அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும் என ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram