தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் உறுதி ‘ரிசர்வ் வங்கி அறிவித்தால் மட்டும் ஞாயிறன்று வங்கிகள் இயங்கும்!’

24 Sept 2026, 9:57 pm
3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் உறுதி ‘ரிசர்வ் வங்கி அறிவித்தால் மட்டும் ஞாயிறன்று வங்கிகள் இயங்கும்!’
<p><strong>3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் உறுதி ‘ரிசர்வ் வங்கி அறிவித்தால் மட்டும் ஞாயிறன்று வங்கிகள் இயங்கும்!’</strong></p><p>சென்னை, செப். 23 -வங்கிகளுக்கு வேலை நாட்களை 5 நாட்களாக வரையறுக்க வலியுறுத்தி, அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும்இணைந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை 3நாட்களுக்கு நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சகமானது, செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் செயல்படும் என்றுதிடீரென அறிவித்தது. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சியாக இந்தஅறிவிப்பு பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (UFBU) முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.எச்.வெங்கடாசலம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று ஒன்றியநிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்தால்,வங்கிகள் இயங்கும். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால், ஞாயிற்றுக்கிழமை வங்கிப்பணிகளைச் செய்ய நாங்கள் தயாராகவே இருக்கிறோம். பொதுமக்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சனையும்இல்லை” என்று தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.