முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிகளுக்கு எளிய முறையில் வங்கிக் கடன் வழங்க வேண்டும்

16 Jun 2026, 12:18 am
சாலையோர வியாபாரிகளுக்கு எளிய முறையில் வங்கிக் கடன் வழங்க வேண்டும்

சாலையோர வியாபாரிகளுக்கு எளிய முறையில் வங்கிக் கடன் வழங்க வேண்டும்

சென்னை, ஜூன் 15- பெரம்பூர் அறிஞர் அண்ணா சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் முதல் பேரவைக் கூட்டம் தலைவர் ஜி.வெங்கடேசன் தலைமையில் தோழர் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. ஜெயந்தி அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். நகர விற்பனை குழு உறுப்பினர் ஜி.மோனிஷா பேரவையை துவக்கி வைத்தார். அமைப்புசாரா சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஜாகீர் உசேன் வாழ்த்திப் பேசினார். சென்னை மாவட்ட சாலை யோர சிறுகடை விற்பனை யாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக ஞானராஜ் வரவேற்றார். இளவரசன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

முறையாக கணக் கெடுப்பு நடத்தி வியாபாரி கள் அனைவருக்கும் அடை யாள அட்டை உடனே வழங்க வேண்டும், வியாபார ஸ்தலத்தை முறைப்படுத்தி கொடுக்க வேண்டும், தகுதி உள்ள அனைவருக்கும் வங்கிக் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

தலைவராக ஜி.வெங்க டேசன், செயலாளராக ஞானராஜ், பொருளாளராக இளவரசன் உள்ளிட்ட 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram