முந்தய பக்கம்

வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை தகவல் வதந்தி

1 Oct 2026, 10:55 pm
வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை தகவல் வதந்தி

வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை தகவல் வதந்தி

சென்னை, அக். 1 -அனைத்துச் சனிக்கிழமைகளும் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறை என ஒன்றிய அரசு அறிவித்ததாகப் பரவும் தகவல் வதந்தி என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு வெளியிட்டதுபோல் போலியான சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் வழக்கிற்கு தடையில்லை:இசக்கி சுப்பையா மனு தள்ளுபடி!

சென்னை, அக். 1 -அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக. சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. துரையை 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

பின்னர் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தார். இதனிடையே, அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் காந்திமதிநாதன் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.

இதற்குப் பதிலளிக்குமாறு இசக்கி சுப்பையாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என இசக்கி சுப்பையா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, காந்திமதிநாதனின் மனுவை நிராகரிக்க மறுத்து, இசக்கி சுப்பையாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார். அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற பொதுநல வழக்கு விசாரணையில் உள்ள சூழலில், இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram