முந்தய பக்கம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் கடலூரில் ஆதரவு ஆர்ப்பாட்டம்

1 hour before
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் கடலூரில் ஆதரவு ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் கடலூரில் ஆதரவு ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.25-வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி வேலை என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செப்.28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மூன்று நாள் வேலைநிறுத்தத்துக்கு ஆதர வாக கடலூரில் ஆயத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் செம்மண்டலம் இந்தியன் வங்கி கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் மீரா தலைமை தாங்கினார். திருமலை முன்னிலை வகித்தார்.

ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் லட்சுமணன், தேசிய வங்கி ஊழியர் சம்மேளன கடலூர் மண்டலச் செயலாளர் நெப்போலியன், அகில இந்திய அதிகாரிகள் சம்மேளனம் சார்பில் பிரவின்குமார், இன்போக் சங்கம் சார்பில் கோகுல்நாத், இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் கலைவாணன், முன்னாள் துணைத் தலைவர் எம். மருதவாணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்தியன் வங்கி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram