வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்</strong></p>
<p>தேனி, ஜன.27- வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வங்கி சங்கங்களின் கூட்ட மைப்பான ‘யுனைடெட் போரம் ஆப் வங்கி யூனி யன்ஸ்’ சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்றது. இதனொரு பகுதியாக தேனி மாவட்டத்தில் வங்கி அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். தேனியில் பெரிய குளம் சாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி முன்பு நடந்த போராட்டத் திற்கு தேனி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலை வர் ஜெய் கிருஷ்ணன், ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்க நிர்வாகி சுப்பிரமணி, கனரா வங்கி ஊழியர் சங்க நிர் வாகி மகாலட்சுமி உள்ளிட் டோர் பேசினர். ஆர்ப்பாட்டத் தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் கனரா வங்கி உள் ளிட்ட அனைத்து பொதுத் துறை வங்கிகளின் கிளை களில் பணியாற்றும் ஊழி யர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப் பட்டன.</p>
