கிராம வங்கி பங்குகளை விற்க எதிர்ப்பு வங்கி ஊழியர்கள் போராட்டம்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>கிராம வங்கி பங்குகளை விற்க எதிர்ப்பு வங்கி ஊழியர்கள் போராட்டம்</strong></p>
<p>சேலம், டிச.17- தமிழ்நாடு கிராம வங்கி பங்குகளை விற்க எதிர்ப்பு தெரி வித்து அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம தலைமை அலுவலகம் முன்பு கிராம வங்கி ஊழியர் சங்கம் மற்றும் கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஹரியானா கிராம வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் கேரளம் கிராம வங்கி ஆகிய மூன்று கிராம வங்கிகளின் அரசின் பங்குகளை விற்பனை செய்வது (ஐபிஒ) தொடர்பான விவா தக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று உள்ளது. இந்த நடவடிக் கையை எளிதாகவும், சாதாரணமாகவும் கடந்து செல்லக் கூடாது. இது கிராம வங்கிகளின் பொதுத்துறை தன்மைக்கும், அதன் சமூக நோக்கத்திற்கும் நேரடியான அச்சுறுத்தலாகும். எனவே கிராம வங்கிகளை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம வங்கிகளை தொடர்ந்து பொதுத் துறை நிறுவனமாக நீடிப்பு செய்ய வேண்டும். வங்கிகளில் தனியார் மயத்தை புகுத்தக் கூடாது. வங்கிகளின் பங்கு விற் பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம தலைமை அலுவலகம் முன்பாக கிராம வங்கி ஊழியர் சங்கம் மற்றும் கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் ஒய். அஸ்வத், முன்னாள் பொதுச் செய லாளர் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் பாரதி கிருஷ்ண குமார், அலுவலர் சங்க பொதுச் செயலாளர் எஸ். அறிவுடை நம்பி, தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் எம். சோலை மாணிக்கம், இந்திய வங்கி ஊழி யர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஏ.ராஜேந்திரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
