வாரம் இருநாள் விடுமுறை கோரி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>வாரம் இருநாள் விடுமுறை கோரி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்</strong></p>
<p>8 லட்சம் பேர் பங்கேற்பு! சென்னை, ஜன.27 - வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் விடு முறை அளிக்க வலியு றுத்தி, திங்களன்று (ஜன.27) நாடு தழு விய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டனர். சென்னையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத் தில், வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (AIBEA) பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது: அரசு அலுவலகங்கள், எல்ஐசி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் வாரம் இருநாள் விடுமுறை நடை முறையில் உள்ளது. ஆனால், வங்கித் துறையில் மட்டும் மாதத்தின் இரண்டு சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. இதற்காக வார நாட்களில் கூடுதலாக 40 நிமிடங்கள் பணிபுரிய ஊழியர்கள் ஒப்புக்கொண்ட போதிலும், கடந்த இரண்டு ஆண்டு களாக ஒன்றிய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறது. மத்திய தொழிலாளர் நல ஆணை யர் நடத்திய பேச்சுவார்த்தையில், நிதித்துறை அதிகாரிகள் எவ்வித உத்தர வாதமும் தராததால், இந்தப் போராட் டம் தவிர்க்க முடியாமல் போனதாக அவர் விளக்கமளித்தார். பொதுத்துறை மட்டுமல்லாது தனியார், அயல்நாட்டு மற்றும் கிராமிய வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.</p>
