தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வங்கதேசத்தில் வேகமாக பரவும் தட்டம்மை : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

30 May 2026, 9:08 pm
வங்கதேசத்தில் வேகமாக பரவும் தட்டம்மை : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

வங்கதேசத்தில் வேகமாக பரவும் தட்டம்மை : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

ராஞ்சி வங்கதேசத்தில் தட்டம்மை வேக மாக பரவி வருகிறது.சனிக்கிழமை மாலை வரை நாடு முழுவதும் 512 குழந்தைகள் தட்டம்மையால் உயிரிழந் துள்ளன.

தலைநகர் டாக்காவில் உள்ள மருத் துவமனைகள் தட்டம்மை நோய் பாதிப்பு களால் திணறி வருகின்றன. அங்கு தட்டம்மைக் கென பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டிருந்தா லும், போதுமான எண்ணிக்கையிலான தீவிர சிகிச் சைப் பிரிவு படுக்கைகள் இல்லை என்பதால் டாக்காவில் நிலைமை மோசமாகி வருகிறது.

இந்நிலையில், வங்கதேச எல்லைப்பகு திக்கு அருகில் உள்ள சந்தால் பர்கானா பகுதி க்கு (எல்லையை தொடாத அருகில் உள்ள பகுதி) ஜார்க்கண்ட் அரசு தட்டம்மை நோய்க் கான அவசரநிலை அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

தும்கா, தியோகர், கோடா, சாகிப் கஞ்ச், பாகுட், ஜம்தாரா ஆகிய 6 மாவட்டங்க ளை உள்ளடக்கிய சந்தால் பர்கானா பகுதிக் கான அவசரநிலை குறித்து ஜார்க்கண்ட் சுகாதார அமைச்சர் இர்பான் அன்சாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கதேசத்தில் தட்டம்மை வேக மாக பரவி வருகிறது.

அதனால் சந்தால் பர்கானா பிரிவை அதீத எச்சரிக்கையில் வைக்க உத்தர விட்டுள்ளோம். குறிப்பாக எல்லைப் பகுதி களில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது.

சந்தால் பர்கானா மட்டு மின்றி தட்டம்மை அவசரநிலையை கையாள்வ தற்கு ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம், சதார் மருத்துவ மனை ஆகியவை முழுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய - வங்கதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சாஹிப் கஞ்ச், பாகூர், தியோகர் மாவட்டங்களுக்குத் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

முன் னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் மருத்துவ முகாம்க ளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இருப்பி னும், தியோகரில் இதுவரை தட்டம்மை பாதிப் புகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை” என அவர் கூறினார்.

மேற்கு வங்க பாஜக அரசு அலட்சியம்

வங்கதேச எல்லையை தொடாத எதிர்க்கட்சிகள் ஆளும் (ஜே எம்எம் - காங்கிரஸ்) ஜார்க் கண்ட் மாநில அரசு தட்டம்மைக்கான அவசர நிலையை அறிவித்துள்ளது.

ஆனால் வங்க தேச நாட்டுடன் அதிகளவில் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்யும் பாஜக அரசோ தட்டம்மை தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.