தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

16 Aug 2026, 9:10 pm
விளையாட்டு

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றி புதிய வரலாறு படைத்த வங்கதேசம்

2 டெஸ்ட் போட்டிகளை கொண்டதொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தசுற்றுப்பயணத்தின் முதல் போட்டி வியாழனன்று டார்வின் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மகமூத் (6 விக்கெட்டுகள்) தாக்குதலைசமாளிக்க முடியாமல் 53 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி,தன்சித் ஹசனின் அபார சதம் (101 ரன்கள்), கேப்டன் சாண்டோவின் பொறுப்பான ஆட்டம் (84 ரன்கள்) மற்றும்மெஹிதி ஹசனின் (65 ரன்கள்)அரைசதத்தால் 426 ரன்கள்குவித்தது.

228 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, வங்கதேசசுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன்மிராஸின் சுழலில் சிக்கி திணறியது. கேமரூன் கிரீன் போராடி 104 ரன்கள் குவித்து சதம் அடித்த போதிலும், மற்றவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலியா 284 ரன்களுக்கு ஆட்டமிழந்து, வங்கதேச அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் நிர்ணயம் செய்தது. வங்கதேசம் அணிதரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளையும், ஹசன் மகமூத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிஅசத்தினர்.

மிக எளிதான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள்எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொமினுல் ஹக் 30 ரன்களுடனும், ஷத்மான் இஸ்லாம் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்கா மல் களத்தில் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். வங்கதேச அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அந்நாட்டு அணியை வீழ்த்தியது இல்லை. முதன்முறையாக அங்கு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம், வங்கதேச அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

உலகக்கோப்பை ஹாக்கி 2026 இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய ஆடவர் அணி

16ஆவது சீசன் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் சனியன்று தொடங்கியது. ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் இந்த தொடர் ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் ஒரே இடத்தில் (இரண்டு நாடுகளின் - இரண்டு மைதானங்களில்), ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஆடவர் அணி தனது 2ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய ஆடவர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து

நேரம் : இரவு 8:30 மணிக்கு (இந்திய நேரம்)

இடம் : ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

சேனல் : ஸ்டார் ஸ்போர்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

(குறிப்பு : இந்திய மகளிர் அணிக்கு திங்களன்று போட்டிகள் கிடையாது)

காலே டெஸ்ட் : இந்திய அணி 460 ரன்கள் குவிப்பு

2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அணி, இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சனியன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்​திய அணி​ பேட்​டிங் தேர்வு செய்தது. மழையால் 73 ஒவர்களுடன் நடைபெற்ற முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. முதல் நாளில் தேவ்தத்படிக்கல் சதமடித்து (131 ரன்கள்) அசத்தினார். 77 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுல் காயம் காரணமாக வெளியேறினார். இத்தகைய சூழலில் தேவ்தத் படிக்கலுடன், ரிஷப் பண்ட்21 ரன்களுடன் இரண்டாம் இன்னிங்ஸில்விளையாட தயாராக இருந்தார்.

இரண்டாவது நாளான ஞாயிறன்று காலை முதல் மீண்டும் இலங்கையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மதிய உணவு இடைவேளை விரைவாக எடுக்கப்பட்டு முதல் சீசன் முடிக்கப்பட்டது. மழை நின்றபின் தொடர்ந்து ஆட்டம்நடைபெற்றது. தேவ்தத் படிக்கல் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் மேற்கொண்டு 5 ரன்கள்எடுத்து 82 ரன்களில் வெளியேறினார். துருவ் ஜுரல் (51 ரன்கள்) அரைசதமடித்து ஆட்டமிழந்தார். இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி116 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்திருந்தது. திங்களன்றுதொடர்ந்து 3ஆம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.