பெங்களூர் கல்குவாரியில் பாறை சரிந்து 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
10 hours before

பெங்களூர் தெற்கில் உள்ள கல் குவாரி ஒன்றில் ராட்சத கிரானைட் பாறை சரிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள மதபட்டணா பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் ராட்சத கிரானைட் பாறை சரிந்து விழுந்ததில், பீகாரை சேர்ந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடைபெற்றபோது, சுமார் 20 தொழிலாளர்கள் அங்கு பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.