முந்தய பக்கம்

களக்காடு பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி

17 Feb 2026, 3:36 pm
களக்காடு பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி
<p><strong>களக்காடு பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி</strong></p> <p>திருநெல்வேலி, பிப் 17- நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழைத்தார்கள் &nbsp;விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. 1 கிலோ ரூ.18க்கு &nbsp;விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவா ரத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு &nbsp;தனி கிராக்கி உள்ளது. இங்கு விளை யும் ஏத்தன் ரக வாழைகள் சிப்ஸ் தயாரிக்க வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு &nbsp;ஆண்டும் களக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழை கள் பயிரிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. &nbsp;இந்தாண்டும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயி கள் வாழை பயிரிட்டனர். தற்போது வாழைத்தார்கள் அறு வடை நடந்து வருகிறது. வியாபாரிகள் விளைநிலங்க ளுக்கு வந்து, வாழைத்தார்களை எடை போட்டு வாங்கிச் செல்கின்றனர். அறுவடை சீசன் தொடங்கிய போது 1 கிலோ &nbsp;ஏத்தன் ரக வாழை ரூ.30க்கு விற்பனையானது. அதன்பின் &nbsp;படிப்படியாக வாழைத்தார் விலை இறங்கு முகமானது. தற்போதைய நிலவரப்படி 1 கிலோ ரூ.18க்கு விற்பனை யானது. இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. 1 வாழைக்கு ரூ.300 வரை விவசாயிகள் செலவு &nbsp;செய்கின்றனர். ஆனால் 1 வாழைத்தார் ரூ.100க்கே விற்பனை யாகிறது. வாழைக்கு முட்டு கொடுக்கும் 1 கம்பின் விலையே ரூ.120 ஆகும். அந்த &nbsp;கம்பின் விலையை விட &nbsp;குறைவாக வாழைத்தார் விற்பனையாவதால் விவசாயி களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கியும், தங்க நகைகளை அடகு வைத்து &nbsp;பணம் பெற்றும் விவசாயம் செய்து வரும் நிலையில் வாழைத்தாரின் விலை வீழ்ச்சியால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram