தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வரத்து சரிவால் வாழை விலை கிடுகிடு உயர்வு

20 May 2026, 12:00 am
வரத்து சரிவால் வாழை விலை கிடுகிடு உயர்வு
<p><strong>வரத்து சரிவால் வாழை விலை கிடுகிடு உயர்வு</strong></p><p>கோவை, மே 19- கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வாழைத்தார்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ள தால், சந்தைகளில் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பகுதிகளான பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம், தொண் டாமுத்தூர் மற்றும் காரமடை ஆகிய பகுதிகளில் பெருமளவில் வாழை பயிரிடப்படுகிறது. இங்கிருந்து தின சரி டன் கணக்கில் வாழைத்தார்கள் கோவை உழவர் சந்தைகளுக்கும், பூ மார்க்கெட் மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். கோவை மாவட்ட மொத்த வாழை வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடுமை யான கோடை வெயிலால் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததன் காரண மாக, வாழையின் விளைச்சல் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், அண்மையில் கோவையின் புறநகர் பகுதிகளில் வீசிய திடீர் சூறாவளிக் காற்றுடன் கூடிய கோடை மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதம டைந்தன. இதனால் சந்தைக்கு வரும் வாழையின் வரத்து வழக்கத்தை விட பாதியாக குறைந்துள்ளது. அதேநேரம், சித்திரை திருவிழாக் கள், தொடர் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் கோவில் விசேஷங்கள் கார ணமாக வாழையின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. வரத்துக் குறைவும், தேவையதிகரிப்பும் இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய கார ணம், என்றனர். ரக வாரியாக வாழை விலைப் பட்டியல் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை உயர்ந்து ரூ.60 முதல் ரூ.75 வரை விற்பனையாகிறது. சிப்ஸ் தயாரிப்பிற்குப் பெரிதும் பயன்படும் நேந்திரன் வாழை கிலோ ரூ.10 இல் இருந்து, தற்போது ரூ.25 முதல் ரூ.35 ஆக அதிகரித்துள்ளது. நடுத்தர மக்களால் அதிகம் நுகரப்ப டும் பூவன் மற்றும் கற்பூரவள்ளி வாழைத்தார்கள் முந்தைய விலை யான ரூ.200 - ரூ.300-ல் இருந்து, தற் பொழுது ரூ.400 முதல் ரூ.600 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப் படுகிறது. விளைச்சல் பாதிப்பால் நஷ்டத் தைச் சந்தித்த போதிலும், தற்போது கிடைத்து வரும் இந்த நல்ல விலை தங்களுக்கு ஓரளவிற்கு ஆறுதலைத் தருவதாக வாழை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனினும், புதிய வரத்துகள் சந்தைக்கு வந்து நிலைமை இன்னும் சில வாரங்கள் சீராகும் என்பதால், வாழையின் இந்த விலையேற்றம் மேலும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ள தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.