முந்தய பக்கம்

வரத்து குறைவால் வாழை இலை  கடும் விலை

4 Dec 2025, 3:52 pm
வரத்து குறைவால் வாழை இலை  கடும் விலை
<p><strong>வரத்து குறைவால் வாழை இலை &nbsp;கடும் விலை</strong></p> <p>சின்னாளப்பட்டி,டிச.4- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மழை, பனிப்பொழிவு காரணமாக வாழை இலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வாழை இலை விற்பனை கடைகள் உள்ளன. இந்த &nbsp;கடைகளுக்கு விற்ப னைக்காக மதுரை, சோழ வந்தான், வாடிப்பட்டி, வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதியிலிருந்து வாழை இலை விற்பனைக்காக கொள்முதல் செய்யப்படும். கடந்த மாதங்களில் 200 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.700க்கு விற்பனையானது. தற்பொழுது கடும் பனிப் பொழிவு காரணமாக வரத்து குறைவாகவே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் 200 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.2,500க்கு விற்பனை &nbsp;செய்யப்படுகிறது. இதுகுறித்து வாழை இலை வியாபாரி ஒருவர் கூறுகையில், &ldquo;முகூர்த்த நாட்கள், தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் வாழை இலையின் தேவை அதிகம் உள்ளது. ஆனால் கடும் மழை, பனிப் பொழிவு காரணமாக விற்பனைக்கு கொள்முதல் செய்யப்படும் வாழை இலை குறைந்த அளவே வருகிறது. இன்னும் சில மாதங்களுக்கு இந்த விலை உயர்வு நீடிக்கும்&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram