முந்தய பக்கம்

வாழை இலை விலை கடும் வீழ்ச்சி உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை

13 May 2026, 10:16 pm
வாழை இலை விலை கடும் வீழ்ச்சி உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை
<p><strong>வாழை இலை விலை கடும் வீழ்ச்சி உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை</strong></p><p>சிவகங்கை, மே 13- சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே உள்ள மலம்பட்டியில் வாழைத்தார் மற்றும் வாழை இலைகள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங் கள் விளைவித்த வாழைத் தார் மற்றும் வாழை இலை களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் வாழை இலை வரத்து அதி கரித்ததுடன், முகூர்த்த நாட் கள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தால் வாழை இலை விலை கடு மையாக சரிந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கட்டு வாழை இலை ரூ.1,200 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.200 முதல் ரூ.400 வரை மட்டுமே விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உற்பத்தி மற்றும் பராமரிப்பு செல வுக்குக் கூட பணம் கிடைக் காத சூழல் ஏற்பட்டுள்ளதாக வும், கடும் நஷ்டம் ஏற்பட் டுள்ளதாகவும் விவசாயி கள் வேதனை தெரிவித்துள் ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram