சுற்றுலாத் தலங்களில் திரைப்படம் எடுக்க தடை
1 Apr 2026, 4:02 pm
<p><strong>சுற்றுலாத் தலங்களில் திரைப்படம் எடுக்க தடை</strong></p>
<p>உதகை, ஏப்.1- நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் மே மாதம் இறுதி வரை திரைப்படம் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் என்பதால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல் வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்று லாப் பயணிகள் வருகை புரிவார்கள். இவ்வாறு நீலகிரிக்கு கோடை சீசனில் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கோடை விழாக்களான காய் கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண் காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாக்கள் நடைபெறும். இவற்றை காண அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக் கப்படும். அதேபோல், இந்தாண்டு ஏப்.1 ஆம் தேதி (புதனன்று) முதல் மே மாதம் இறுதி வரை சினிமா படப்பிடிப் பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற் போது, மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாக்களுக்காக பூங்காக்களில் மலர் செடிகளை நடவு செய்வது புல் வெளிகளை பராமரிப்பது என பல்வேறு பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>
