திருச்சி விரைவு செய்திகள்
22 Dec 2025, 2:53 pm
<p><strong>களக்காடு, தலையணையில் குளிக்க தடை நீக்கம் </strong> </p>
<p> திருநெல்வேலி ,டிச .22- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையையொட்டி பெய்த கனமழை காரணமாக, களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நீர்வரத்து சீராகி உள்ளதைத் தொடர்ந்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உத்தரவின் படி அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத் துறை சார்பில் வெளியி டப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘களக்காடு வனக்கோட்டம், களக்காடு வனச்சரகத்திற்குட்பட்ட தலையணை சூழல் சுற்றுலாப் பகுதியில் திங்கட்கிழமை முதல் சுற்றுலாப் பயணி கள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண் டிகைநெருங்கும் நிலையில் தலையணையில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள செய்தி சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது தூத்துக்குடி, டிச.22- தூத்துக்குடியில் உள்ள துறைமுகம், அனல்மின் நிலையம், உப்பளங்கள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து சமீப காலமாக ஒரு கும்பல் போலி லாட்டரி விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக போலியாக ஈ-மெயில் ஐடி, வாட்ஸ் அப் குருப், மற்றும் பல்வேறு பெயர்களில் சமூக வலைதளங்கள் தொடங்கி அதன் மூலம் தொழிலாளர்களிடம் தினசரி ரூ.300 முதல் ரூ 500 வரை பணத்தை பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், நகர ஏ.எஸ்.பி. மதன் ஆகியோர் அறிவுறுத்தியதின் பேரில் தென்பாகம், மத்திய பாகம், வடபாகம், தாளமுத்துநகர், தெர்மல்நகர்,முத்தையாபுரம் மற்றும் சிப்காட், புதுக்கோட்டை ஆகிய காவல் சரக போலீசார் இதில் கவனம் செலுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து துணை ஆய்வாளர் முத்துராஜா தலைமை யிலான போலீசார் விரைந்து சென்று போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (53) சிலுவைப்பட்டியை சேர்ந்த காசிலிங்கம் (38 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த போலி நம்பர் லாட்டரிகள், அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகளை பறிமுதல் செய்து மேற்கொண்ட விசாரணையில் தொழிலாளர்களை குறிவைத்து அதிக விலைக்கு போலி லாட்டரிகளை விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர். இதுபோல் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கும்பலை ஒட்டுமொத்தமாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
