சோத்துப்பாக்கம் - சித்தாமூர் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதித்திடுக மாவட்ட ஆட்சியரிடம் மாதர், வாலிபர் சங்கம் மனு!
8 Jun 2026, 11:16 pm
<p><strong>சோத்துப்பாக்கம் - சித்தாமூர் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதித்திடுக மாவட்ட ஆட்சியரிடம் மாதர், வாலிபர் சங்கம் மனு!</strong></p><p>செங்கல்பட்டு, ஜூன் 8- செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் - சித்தாமூர் மற்றும் சோத்துப்பாக்கம் - வந்தவாசி சாலைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சென்று திரும்பும் நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதைத் தடை செய்ய வலியுறுத்தி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இச்சாலைகளில் அதிக அளவில் கல்குவாரி லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த 2025 ஜனவரி 25 அன்று மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4மணி முதல் 7 மணி வரையிலும் கனரக லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களை இயக்கக் கூடாது என நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த அறிவுறுத்தல் கள் முறையாக நடை முறைப்படுத்தப்படா மல், பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களிலும் கல்குவாரி லாரிகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல லாரிகள் பதிவு எண் பலகை (நம்பர் பிளேட்) இல்லாமலும், தார்ப்பாய் மூடாமலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடனும் (ஓவர் லோடு) அதிவேகமாக இயக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவ தோடு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கே.நவரத்தினம், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இரா.சதீஷ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், காவல்துறை அறிவித்த நேரக் கட்டுப்பாடுகளை முழுமை யாக அமல்படுத்த வேண்டும் என்றும், விதிமீறி இயக்கப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சாலை பாதுகாப்பை உறுதி செய்ய வருவாய், காவல் மற்றும் போக்குவரத்து துறைகள் இணைந்து நிரந்தர கண்காணிப்பு ஏற்பாடு களைச் செய்ய வேண்டும் என அவர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
