பாலதோட்டனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம்: மருத்துவர் இல்லாததால் மக்கள் அவதி
3 Jul 2026, 11:32 pm

பாலதோட்டனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம்: மருத்துவர் இல்லாததால் மக்கள் அவதி

கிருஷ்ணகிரி,ஜூலை 3- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், தளி ஒன்றியத்திற்குட்பட்ட பாலதோட்டனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் முறை யாகப் பணிக்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலைப்பகுதி சார்ந்த கிராமமான இங்குள்ள சுமார் 450 குடும்பத்தினர் சிகிச்சைக்காக இந்த நிலையத்தையே நம்பியுள்ளனர்.

இங்குள்ள மருத்துவர் பெரும்பாலான நாட்களில் பணிக்கு மிகத் தாமதமாக வருவதாகவும், சில நாட்கள் வருவதே இல்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். நீண்ட தூரம் நடந்து சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள், காலை முதலே காத்திருந்தும் மருத்துவரைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பு கின்றனர். மருத்துவர் இல்லாத நேரங்களில், வேறு வழியின்றி அங்கிருக்கும் செவிலி யர்களே நோயாளிகளுக்கு ஊசி போடு வதும், மாத்திரைகளை வழங்குவதும் தொடர்கிறது. செவிலியர்கள் அளிக்கும் சிகிச்சையின் தரம் மற்றும் அதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் நோயாளிகள் மருந்து களைப் பெற்றுச் செல்கின்றனர். இந்தச் சூழலால், பலர் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்குச் செல்வதையே தவிர்த்து விடு கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தளி ஒன்றியச் செயலாளர் அனுமப்பா கூறுகையில், மருத்துவ மனையின் செயல்பாட்டைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலை யிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து காலதாமதமாக வரும் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவர் வராத நாட்களில் மாற்று ஏற்பாடாகப் பிற மருத்துவர்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற மக்களின் சுகாதார நலனை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் இக்கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.