தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்த்தாண்டத்தில் பாலர் பூங்கா குமரி மாவட்ட முதலாவது மாநாடு

28 Sept 2026, 11:27 pm
மார்த்தாண்டத்தில் பாலர் பூங்கா குமரி மாவட்ட முதலாவது மாநாடு

மார்த்தாண்டத்தில் பாலர் பூங்கா குமரி மாவட்ட முதலாவது மாநாடு

குழித்துறை, செப்.28 -கன்னியாகுமரி மாவட்ட பாலர் பூங்கா முதலாவது மாநாடு மார்த்தாண்டம் எம்எக்ஸ்ஆர் நினைவு கலைபண்பாட்டு மையத்தில் செப்.27 (ஞாயிறு) அன்று நடைபெற்றது.மாவட்ட துணைத் தலைவர் காயத்ரிலால் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் மிருணா வரவேற்றார். முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் குயிலி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் வாழ்த்தி பேசினார்.மாவட்டத் தலைவராக பிலால், செயலாளராக கீர்த்தி, துணைத் தலைவர்களாக மிருணா, அனு, அஜய், துணைச் செயலாளர்களாக குயிலி, ஜோயல், அகல்யா, மாவட்டக் குழு உறுப்பினர்களாக ஆஷிகா, காயத்ரிலால், ஸ்ரீஜித், அக்ஷித், ஜெர்ஷா, சிஜித், றபீக் ஆகியோரும் மாவட்ட அமைப்பாளராக ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஆசிரியர் பிரபுகுமார், ஒருங்கிணைப்பாளராக வினோஜா தேர்வுசெய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து கன்வீனர் சசிகுமார் உரையாற்றினார். பாலர் பூங்கா மத்திய வழிகாட்டுகுழு உறுப்பினர் ராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். பாலர் பூங்காவின் கருத்தாளர் முரசு ஆனந்த்-க்கு மலர்பூங்கா முழக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குழந்தைகளிடம் அறிவியலுக்கு புறம்பான, உண்மைக்கு மாறான தகவல்களை புகுத்துவதை தடுக்கவும், தன்னம்பிக்கையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.