முந்தய பக்கம்

பெரணமல்லூரில் பாலர் பூங்கா கிளை அமைப்பு

6 Oct 2026, 1:24 am
பெரணமல்லூரில் பாலர் பூங்கா கிளை அமைப்பு
<p><strong>பெரணமல்லூரில் பாலர் பூங்கா கிளை அமைப்பு</strong></p><p>திருவண்ணாமலை,அக் 5-திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் பாலர் பூங்கா கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. பாலர் பூங்காவின் மாநில மாநாடு அக்டோபர் 2 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் பாலர் பூங்காக்களை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் பாலர் பூங்கா அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 20 பாலர்கள் கலந்து கொண்டனர். பாலர் பூங்காவின் கிளை தலைவராக சி.ஹரிகரன், செயலாளராக எஸ். கோஷிகா, பொருளாளராக வெ.ராமதாஸ், ஒருங்கிணைப்பாளராக டி.தமிழ்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாதந்தோறும் பாலர் பூங்கா கூட்டம் நடத்துவதெனவும் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினவிழாவைச் சிறப்பாக நடத்துவதெனவும் முடிவானது. கூட்ட முடிவில் எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை துணைத்தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிளை செயலாளர் எஸ்.கோஷிகா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram