நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக பாலாபுரம் தேர்வு
18 Nov 2025, 5:50 pm
<p><strong>நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக பாலாபுரம் தேர்வு</strong></p>
<p>திருவள்ளூர், நவ. 18- நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 3 வது இடத்திற்கான விருதுதினை ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலிடமிருந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பெற்றுக்கொண்டார். புதுதில்லி விக்யான் பவனில் ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் செவ்வாயன்று (நவ 18) நடைபெற்ற 6 வது தேசிய நீர் விருதுகள் விழாவில் திருவள்ளூர் மாவட்டம், பாலாபுரம் ஊராட்சி நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 3 வது இடத்திற்கான விருதுதினை ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாபிடம் வழங்கினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், இணை இயக்குநர் வை.ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.</p>
