தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாலாஜி மகன் படிக்கப் போன கதை! - நவகவி

26 Sept 2026, 8:33 pm
பாலாஜி மகன் படிக்கப் போன கதை! - நவகவி

பாலாஜி மகன் படிக்கப் போன கதை! - நவகவி

காலேஜின்னா காலேஜி இது கண்ணப் பறிக்கும் காலேஜி! காசு பறிக்கும் காலேஜின்னும் சொல்றாருங்க அண்ணாஜி! எங்க ஊரு எருமைப்பட்டி வில்லேஜி! பையனைச் சேர்க்கப் போறார் அங்கே பாலாஜி!

கல்லூரி கட்டிடம் பார் ஆஹா என்ன ஜோருங்க! அண்ணாந்தால் கழுத்துச் சுளுக்கும் ஐநூறு அடி தேருங்க! உள்ளப் போய் சுத்த ஆகும் ஒரு நாளு! ஓய்ந்துபோகும் நடந்துநடந்து கை காலு!

செங்கல்லை அடுக்கிக் கட்டின கட்டிடம் இது இல்லப்பா! சேர்த்து வச்ச நோட்டுக் கட்டை அடுக்கிக் கட்டினான் அப்பப்பா! சாய்ந்த கோபுரம் பைசா கோபுரம் கேட்டிருக்கேன்! சாயாத இது துட்டு பைசா கோபுரம்தான்!

கல்லாப் பெட்டி மாடலிலே கட்டியிருக்கான் ஆபீசு! குல்லாப் போடும் மந்திரிமகன் குடும்பம் நடத்தும் வசூலு! கல்விக் கட்டணத் தொகையைக் கேட்டா பகீரு! கலங்கிநெஞ்சு வெடிக்கும் படீர் படீரு!

ஜில்லாவிலே பெரிய ஆளு கல்லா கட்டும் கல்லூரி! எல்லா மாணவர் கூட்டமும் அவன் உறிஞ்சி சாப்பிடும் தந்தூரி! “வராதோ அவன் குடும்பத்துக்கே வைசூரி?” வயிறெரிந்து பொழியும் சனம் வசைமாரி!

மாட்டு மந்தை மத்தியில் வரும் மேய்ப்பனைப் போல் பாருங்க! மாணவரின் மத்தியிலே வாரான் முதலாளிங்க! கண்கொத்தி பாம்பு இவன் பரம்பரைங்க! காசு கொத்தும் பாம்பு இவன் ஓரம்பரைங்க!

போலியோ நோய் வந்தவனா ஓட்டப்பந்தய வீரன்ங்க? போலி இவன் கல்வி வள்ளல்! பேரு பெத்தப் பேருங்க! தவளை நீந்தத் தளும்பும் குளத்தண்ணீரு! தாவி இவன் நீந்தப் பெற்றோர் கண்ணீரு! கண்ணாடின்னா வீறல் விடும்; அது இல்ல காலேஜ் தரை! ஏதுமில்லாமல் ஆகிப்போன பெற்றோர்களின் வழுக்கைத் தலை! கன்னத்தாடை தொங்கும் பிரின்ஸ் பால் எப்படி? “கல்வி வள்ளலை” தொங்கித் தொங்கித்தான் அப்படி!

கோட்டு சூட்டு போட்டிருக்கார் பேராசிரியர் டைகட்டி! ஓட்டை மூணு கோட்டில் இருந்தும் கற்பிப்பதில் வெகுகெட்டி! தனியாரு கல்லூரியில் கைகட்டி வாத்தியாரு கிடக்குணுங்க வாய் பொத்தி!

மாடு அன்று பவுண்டுக்குள் பயிரை மேய்ந்த தவறுக்கு! மாணவரும் காம்பவுண்டுக்குள் படித்த “குற்றச்” செயலுக்கு! படிக்காதே மாடு மேய்க்கப் போயிருன்னு! சொல்லாமல் சொல்லுதுங்க கவர்மெண்டு!

ஏழைக்கு எட்டாக்கல்விச் சாலைகளே! எட்டினாலும் கிட்டவில்லை வேலைகளே! படித்து வாங்கின பட்டக் காகிதம் போண்டா கட்டவும் ஆகாது! பட்டம் செய்து விட்டாலும் இந்த பட்டம் வானில் ஏறாது!

பதினைந்து லட்ச டூப்பு பிரதமரே! பக்கோடா சுட மூலதனமும் இல்லீங்களே! பிச்சை பெற்றும் கல்வி கற்கக் கவி சொன்னார் சல்லீசா! பின்நாளில் பிச்சைக்கார வேலைக்கான ப்ராக்டீசா? கழுதை மேய்க்கும் வேலை கூட லாபம் தரும்! கவர்மெண்டை எட்டி உதைக்கக் கற்றுத்தரும்! பாலாஜி மகனுக்கு வச்ச பேரு நேதாஜி! படிச்சாம்பா எப்படியோ பீஸ் கட்டி மெட்டலர்ஜி! வருஷம் தள்ளிப் போகுது அவன் மேரேஜி! வயசில் அவன் தாதாபாய் நவ்ரோஜி! நேதாஜி தம்பி உனக்கு கண்ணீரு எதுக்குப்பா? நெஞ்ச நிமிர்த்தி போராடினா எதும் ஆகாது எக்குத்தப்பா! கவர்மெண்டு காரம் போன பொடி டப்பா! கழண்டு கிழியும் தம்பி காவிக் கலர் ஜிப்பா!

கஷ்டத்துக்கும் நஷ்டத்துக்கும் காரணம் யார்? கண்டுபிடி! கருமாதி வீட்டில் கல் யாணி ராகம் ஏதுக்கடி? இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப்படி ஏறிப் பாரு யுத்தம் செய்யும் வெள்ளைக்கொடி!

நம்ம வீட்டில் எரியலடா வாசமுள்ள ஊதுபத்தி! உதவாக்கரை அரசாலே எரியுது நம் வயிறுபத்தி! ராமனுக்கே நாமம் போடும் திருட்டு புத்தி! ஜெய்ஸ்ரீ ராம் சொல்லிக்கிட்டே வச்சான் வத்தி!

கொடிபிடித்து போராடணும்! இல்லாட்டி என்னாகும்? மடிபிடித்து உருவிடுவான் அண்ணாக் கயிறும் பறிபோகும்! ஜனநாயக வாலிபரின் போர்க்கோலம்! தடை உடைக்கும்! இனி பிறக்கும் பொற்காலம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.