சமூக சீர்திருத்த முன்னோடிகளுக்கு மருந்துவாழ் மலையில் நினைவிடம் பால பிரஜாபதி அடிகளார் வேண்டுகோள்
2 Mar 2026, 3:30 pm
<p><strong>சமூக சீர்திருத்த முன்னோடிகளுக்கு மருந்துவாழ் மலையில் நினைவிடம் பால பிரஜாபதி அடிகளார் வேண்டுகோள்</strong></p>
<p>திருவனந்தபுரம், மார்ச் 2- சமூக சீர்திருத்தத்தின் முன்னோடி களாக விளங்கிய ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சாமிகள், மகான் அய்யன் காளி, அய்யா வைகுண்டர் போன்ற சமூக சீர்திருத்த முன்னோடிகளுக்கு அத்தகைய மகான்களை எல்லாம் ஒருங்கிணைத்த மருந்துவாழ் மலை யில் நினைவிடம் அமைக்க வேண்டும் என விரும்புகிறோம்; கேரள முதல்வர் பினராயி விஜயன் அதற்கான அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பால பிரஜாபதி அடிகளார் வேண்டுகோள் விடுத்தார். திருவனந்தபுரத்தில் நடந்த அய்யா வைகுண்டர் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் மேலும் கூறிய தாவது: “தாழக்கிடப்பாரை தற்காப்ப தே தர்மம்” என போதித்த அய்யா வை குண்டருக்கு திருவனந்தபுரம் பெருநக ரத்தில் மணிமண்டபம் அமைக்க முன்வந்துள்ள கேரள முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இங்கு சிலை வைக்கப்படுவதில்லை. அய்யாவின் சிந்தனைகளை, உலகம் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காக. இந்த மணி மண்டபம் கட்டப்படுகிறது. முதல்வர் இங்கே பேசியது ஒரு ஆவணம். அதை தமிழிலும் மலையா ளத்திலும் ஆங்கிலத்திலும். பறை சாற்ற வேண்டும். நாம் சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட காலத்தில் தொட்டால் மட்டுமல்ல, பார்த்தாலே தீட்டு என்கிற நிலை இருந்தது. அப்போது இங்கு வந்த விவேகா னந்தர், இந்த நாட்டில் பேய் குடியிருக் கிறது என்றார். இன்றைக்கு மதத்தின் பெயரால் இந்த நாட்டை ஆட்சி செய்ப வர்கள் அத்தகைய ஒரு இருண்ட காலத்தைத்தான் கொண்டு வர முயற்சிக் கிறார்கள். இன்னொரு விவேகானந்தர் வந்து, இது பேய்கள் குடியிருக்கும் நாடு என்று கூறும் நிலை வந்து விடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.</p>
