நெல்லையில் பக்ரீத் சிறப்பு தொழுகைகள்
28 May 2026, 11:49 pm
<p><strong>நெல்லையில் பக்ரீத் சிறப்பு தொழுகைகள்</strong></p><p>திருநெல்வேலி, மே 28- நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியா ழக்கிழமை பக்ரீத் சிறப்பு தொழுகைகள் நடை பெற்றன. நெல்லை மேலப்பாளை யம் கரீம் நகரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிறப்பு தொழு கை நடைபெற்றது, மேலப் பாளையம் பஜார் கடலில் தமுமுக சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது, மேலப்பாளையம் ஜின்னா திடலில் வாவர் பள்ளி சார்பில் சிறப்பு தொழு கைகள் நடைபெற்றன, மேலப்பாளையம் ஈத் காத்தி டலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இது தவிர பல்வேறு இடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் நடை பெற்றன ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகையில் எம்எல்ஏ அப்துல் வகாப் முன்னாள் அமைச்சர் மைதீன் கான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
