பக்ரீத் : தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்
28 May 2026, 9:29 pm

பக்ரீத் : தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

சென்னை, மே 28 - இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான ‘துல் ஹஜ்’ஜின் 10ஆம் நாளில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. அதன்படி ‘ஈகை திருநாள்’ என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை, உலகம் முழுவதும் புதன்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டிலும், பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். குறிப்பாக தலைநகர் சென்னையில் குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம், பிராட்வேவில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி மைதானம், எம்.எம்.டி.ஏ முகமது சதக் பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சென்னை பிராட்வேயில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி மைதானத்திலும் ஆயிரக்கணக்கான பெண்கள், ஒன்றாக இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல தமிழகம் முழுவதும் பக்ரீத் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.