முந்தய பக்கம்

பத்ரிநாத் கோயிலில் நன்கொடை முறைகேடு - ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு

6 hours before
பத்ரிநாத் கோயிலில் நன்கொடை முறைகேடு - ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு

பத்ரிநாத் கோயிலில் நன்கொடைகள் நிர்வகிப்பதில் முறைகேடு நடந்த விவகாரத்தில் கோயில் ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட்டில் உள்ள பத்ரிநாத் கோயிலில் பக்தர்கள் அளித்த நன்கொடைகள் நிர்வகிப்பதில் முறைகேடு நடந்த விவகாரத்தில் கோயில் குழுவின் தலைவர் அலுவலகத்தில் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றிய பிரமோத் நௌடியால் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பி.என்.எஸ் பிரிவு 306 (வேலையளிப்பவரின் உடைமையில் உள்ள சொத்தை ஊழியர் திருடுதல்) மற்றும் பிரிவு 316(5) (குற்றவியல் ரீதியான நம்பிக்கைத் துரோகம்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கோயில் நிர்வாகக் குழுவால் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு, கோயில் நன்கொடைகளை நிர்வகிப்பதில் முறைகேடுகள் நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரங்களைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அதே நாளில் நௌடியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கர்வால் கோட்ட ஆணையர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்துள்ளது. விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram