அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத், கேதார்நாத் கோவிலிலும் நன்கொடை முறைகேடு
4 Jul 2026, 8:19 pm

அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத், கேதார்நாத் கோவிலிலும் நன்கொடை முறைகேடு

அயோத்தி ராமர் கோவிலு க்கு பக்தர்கள் அளித்த நன்கொடை மற்றும் காணி க்கைகளில் முறைகேடு நடைபெற்ற தாக எழுந்த புகார்கள் நாடு முழுவ தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியி ருந்த நிலையில், தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரி நாத் மற்றும் கேதார்நாத் கோவில்களி லும் பல கோடி ரூபாய் நன்கொடை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநி லத்தின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளைப் பதிவு செய்வதில் பெரும் முறைகேடுகள் மற்றும் திருட்டு நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ‘பைரவ் சேனா’ என்ற ஆன்மீக அமைப்பின் தலைவரான சஞ்சீவ் காத்ரி என்பவர் கோவில் வளா கத்தில் நடைபெறும் நன்கொடை முறை கேடுகள், திருட்டுகள் குறித்து சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் குறிப்பிட்ட சில ஆவணங்களைச் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு அம்ப லப்படுத்தியுள்ளார். இந்தத் திருட்டில் ஈடுபடும் நபர் பத்ரிநாத், கேதார்நாத் கோவில் நிர்வாகக் குழுவின் தலை வரான ஹேமந்த் திவேதியின் தனிச் செயலாளர் என்றும் சஞ்சீவ் காத்ரி கூறியுள்ளார்.

மழுப்பல் விளக்கம்

இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து பத்ரி நாத், கேதார்நாத் கோவில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஹேமந்த் திவேதி செய்தியாளர்களைச் சந்தித்து,”சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டப்படும் நபர் கேதார்நாத், பத்ரிநாத் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிபவர் என்பது உண்மைதான். ஆனால், அவர் எனது தனிச் செயலாளர் இல்லை. வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இருப்பினும், எழுந்துள்ள புகார் கள் குறித்து உரிய வெளிப்படை யான விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும்” என அவர் மழுப்பலாக கூறி யுள்ளார்.