முந்தய பக்கம்

தண்ணீர் தேடி வந்த குட்டியானைகள்

28 Feb 2026, 2:29 pm
தண்ணீர் தேடி வந்த குட்டியானைகள்
<p><strong>தண்ணீர் தேடி வந்த குட்டியானைகள்</strong></p> <p>தருமபுரி, பிப்.28- ஒகேனக்கல் வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், தண்ணீரை தேடி வனத்தை விட்டு வந்த 2 குட்டியானைகள், குடிநீர் திட்ட கசிவுநீர் தொட்டியில் தேங்கிய தண்ணீரை குடித்துவிட்டு சென்றன. கோடைக்காலம் துவங்கும் முன்பே, &nbsp;தருமபுரி மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பென் னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதி யில் உள்ள நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் வன உயிரினங்கள் தண்ணீர் தேடி, வனப்பகு தியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நி லையில், 2 குட்டியானைகள் தண்ணீரை தேடி &nbsp;அலைந்து திரிந்தது. இதன்பின், கிணறு பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட கசிவுநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்து தாகம் தணித்துக் கொண்டன. வனப் பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய சாலை களில் விலங்குகள் தண்ணீர் தேடி அலை வதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் கூடுத லாக தொட்டிகள் அமைத்து, அடிக்கடி தண் ணீர் நிரப்பி விலங்குகள் வெளியேறாமல் தடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வ லர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram