முந்தய பக்கம்

தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை மீட்பு

6 Feb 2026, 5:17 pm
தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை மீட்பு
<p><strong>தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை மீட்பு</strong></p> <p>வால்பாறை, பிப்.6- வால்பாறை அடுத்த வில்லோனி எஸ்டேட் பகுதியில் வெள்ளியன்று தண்ணீர் தொட் டிக்குள் விழுந்த குட்டி யானை பல மணி &nbsp;நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக வால் பாறை வனச்சரகத்திற்குட்பட்ட வில்லோனி மேல் டிவிஷன் பகுதி உள்ளது. இங்கு தொழி லாளர்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் காலை தண்ணீர் திறப்பதற்காக பிளம்பர் சென்றுள்ளார். அப்போது, அந்த கிணற்றில் யானை குட்டி தவறி விழுந்து கிடப்பதை கண்டுள்ளார். &nbsp;அருகிலிருந்த யானை அவரை துரத்தியதால் மயிரிழையில் உயிர் தப்பினார். தொடர்ந்து, அவர் வனத் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்பும் குட்டி யானையை மீட்க முடியவில்லை. பின்னர், ஜே சி பி எந்தி ரம் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சாலை &nbsp;அமைத்தனர். பின்னர், தண்ணீர் தொட்டி &nbsp;அருகில் சென்ற போது தாய் யானை &nbsp;துரத்தியது. ஆறு மணி நேர போராட்டத் திற்கு பிறகு, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன உயி ரின மோதல் தடுப்பு காவலர்கள் தாய் &nbsp;யானையை அருகில் வராதவாறு பார்த்துக் கொண்டனர். பின்னர், தீவிர முயற்சி செய்து &nbsp;ஜேசிபி எந்திரம் மூலமாக கட்டிடத்தை &nbsp;உடைத்து, தண்ணீர் தொட்டியில் இருந்து யானை மீட்டெடுத்து, கூட்டத்துடன் சேர்த்த னர் இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram