பி.சீனிவாசராவ் 65ஆவது நினைவு நாள் கடைப்பிடிப்பு
1 Oct 2026, 12:39 am
<p><strong>பி.சீனிவாசராவ் 65ஆவது நினைவு நாள் கடைப்பிடிப்பு</strong></p><p>திருப்பூர், செப்.30 –ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராளி, தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தோழன், செங்கொடி இயக்கத்தின் போர்ப்படை தளபதியாக திகழ்ந்த தோழர் பி.சீனிவாசராவின் 65ஆவது ஆண்டு நினைவு நாள் புதனன்று பல்லடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைமை அலுவலகத்தில் தோழர் பி.சீனிவாசராவ்உருவப்படத்திற்கு மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.வசந்தாமணி சீனிவாசராவின் போராட்ட வாழ்வை எடுத்துரைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாவட்டத் தலைவர் ஏ.பஞ்சலிங்கம், மாவட்டச்செயலாளர் கி.கனகராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பரமசிவம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.</p>
