அழிக்கால் மீனவக் கிராமத்தில் கடல் நீர் உட்புகும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணப்படும்
16 Jun 2026, 9:24 pm

அழிக்கால் மீனவக் கிராமத்தில் கடல் நீர் உட்புகும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணப்படும்

நாகர்கோவில், ஜூன் 16 - கன்னியாகுமரி மாவட்டம், கண பதிபுரம் முதல்நிலை பேரூராட்சி க்குட்பட்ட அழிக்கால் கடற்கரை பகுதி மீனவ மக்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் செவ்வாயன்று நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை மற்றும் கடல்சீற்றம் காரணமாக கணபதிபுரம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால் கடலோர கிராமத்தில் தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கடல் நீர் உட்புகுவதால் பொது மக்கள் மற்றும் மீனவ மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், தற்போதைய நிலவரம் மற்றும் கள சூழ்நிலைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மீன வர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறியப் பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடல்சார் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தி கடல் நீர் உட்புகுதலை தடுக்கும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் சுழற்சி நிதியின் (Revolving Fund) மூலம் இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் “கடல்சார் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப பொருளாதார சாத்தி யக்கூறு குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.

இத்திட்டம் தொடர்பாக அழிக்கால் கிராம பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்க ளுடன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார். இரண் டாம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில், திட்டத்திற்கான முன்மொழியப்பட்ட வடிவமைப்பு வரைபடம் பொது மக்கள் மற்றும் மீனவர்களின் கருத்துக்கள் மற்றும் ஒப்புதலுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடல் நீர் உட்புகுதல் பிரச்சனையின் தீவிரத்தையும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கருத்தில் கொண்டு, ஆய்வுப் பணிகளை விரைந்து முடித்து, தேவையான தொடர் நடவ டிக்கைகளை மேற்கொண்டு, திட்டப் பணிகளை விரைவாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இத்திட்டத்தை செயல்படு த்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் மற்றும் ஆதரவு களும் வழங்கப்படும்.

அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் நீர் உட்புகு தல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஐஐடி மெட்ராஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவை யான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு, விரைவில் தீர்வு எட்டப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வில் மீன்வளம் - மீன வர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத், கணபதிபுரம் பேரூராட்சி தலைவி ஸ்ரீவித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.