முந்தய பக்கம்

முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் சென்று வழிபட்ட ஐயப்ப பக்தர்கள்

28 Dec 2025, 5:05 pm
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் சென்று வழிபட்ட ஐயப்ப பக்தர்கள்
<p><strong>முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் சென்று வழிபட்ட ஐயப்ப பக்தர்கள்</strong></p> <p>திண்டுக்கல், டிச.28- திண்டுக்கல் மாவட்டம், சாணார் பட்டி அருகே வேம்பார்பட்டியில் அமைந்துள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு ஐயப்ப பக்தர்கள் சென்று வழிபட்ட நிகழ்வு மத நல்லி ணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. வேம்பார்பட்டி ஐயப்பன் கோவில் சேவா சங்கத்தின் சார்பில், 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ஆம் தேதி, அதாவது நவம்பர் 17ஆம் தேதி 48 நாட்கள் விர தத்தைத் தொடங்கினர். இந்த விரத காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை யும் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. இந்நிலையில், சனிக்கிழமை யன்று மண்டல பூஜையும் அன்ன தான விழாவும் நடைபெற்றது. வேம்பார்பட்டி ஐயப்பன் கோவிலில் கூடிய ஐயப்ப பக்தர்கள், சிறப்பு அபிஷேகம் செய்த பின்னர் ஊர்வல மாக கிராமத்தில் உள்ள கோவில் களுக்குச் சென்று வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, இப்பகு தியில் அமைந்துள்ள முகைதீன் ஆண் டவர் பள்ளிவாசலுக்கும் அவர்கள் சென்றனர். அங்கு இஸ்லாமிய மக்கள் ஐயப்ப பக்தர்களை அன்புடன் வர வேற்றனர். பின்னர் ஐயப்ப பக்தர் கள் முகைதீன் ஆண்டவருக்கு அசரத் பாத்தியா ஓதி, துவா செய்து, பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கினர். ஐயப்ப பக்தர்களின் இந்தச் செயல், அந்தப் பகுதி மட்டுமின்றி தமிழ்நாடு மக்களிடையே மத நல்லிணக்கத்தை மேலும் வலுப் படுத்தும் வகையில் அமைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram