தேவாலய திருவிழாவிற்கு ஐயப்ப பக்தர்கள் சீர்வரிசை
9 Dec 2025, 4:25 pm
<p><strong>தேவாலய திருவிழாவிற்கு ஐயப்ப பக்தர்கள் சீர்வரிசை</strong></p>
<p>ஈரோடு, டிச.9 பவானி அருகே கிறிஸ் துவ தேவாலய திரு விழாவை முன்னிட்டு, ஊர் பொதுமக்கள் சார்பில் ஐயப்ப பக்தர்கள் மத நல் லிணக்க சீர்வரிசை வழங்கி னர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பெரியமோள பாளையம் கிராமத்தில் அருள்நிறை புனித அமல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. 50 ஆம் ஆண்டு பொன்விழா மற்றும் புதிய ஆலயம் திறப்பு விழா, மாதா அமல உற்பவியான ஆண்டு தேர் திருவிழா நடைபெற்று வரு கிறது. இதனை முன்னிட்டு பெரிய மோள பாளையம் கிராம மக்கள் மற்றும் மத நல் லிணக்க குழுவின் சார்பில், இசை வாத்தி யங்கள் முழங்க ஊர் பொதுமக்கள் திங்க ளன்று இரவு சீர்வரிசை கொண்டு சென்ற னர். நிகழ்ச்சியில் உள்ளூர் பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள், பவானி நகர சபை தலை வர் சிந்தூரி இளங்கோ, பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன், ஜம்பை பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயசுதா சீனிவாசன், சிபிஎம் தாலுகாக்குழு உறுப்பி னர் எஸ்.மாணிக்கம், சிபிஐ சார்பில் வழக் கறிஞர் சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
