அய்யம்பாளையம் விவசாய தியாகிகளுக்கு நினைவஞ்சலி
6 Jul 2026, 1:03 am
<p><strong>அய்யம்பாளையம் விவசாய தியாகிகளுக்கு நினைவஞ்சலி</strong></p><p>திருப்பூர், ஜூலை 5- பல்லடம், கே.அய்யம்பாளையம் விவசாய தியாகிகளின் 54 ஆம் ஆண்டு நினைவு தினம், அவர்களின் நினை விடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தின் போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அய்யம்பாளையம் விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலை யில், அவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக் கப்பட்டது. இந்நிகழ்விற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் வை.பழனிச்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் சி.மூர்த்தி, விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன், கோவை மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் மணி, பல்லடம் நிர்வாகிகள் சுப் பிரமணி, லோகநாதன், அவிநாசி வெங் கடாச்சலம், முத்து ரத்தினம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சா.பிரவீன் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மணி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத் தினர். பல்வேறு அரசியல் கட்சிகள், விவ சாய அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
