ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்கிறதா?
9 Jul 2026, 8:59 pm

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்கிறதா?

ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) திட்டத்தின் கீழ் வழங்கப் படும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டு க்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்து வக் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், புற்றுநோய் சிகிச்சை, கல்லீரல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கு இந்த 5 லட்சம் ரூபாய் போதுமானதாக இல்லை. இதன் காரணமாகவே, காப்பீட்டுத் தொகை யை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த உடல் நலம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு (Parlia mentary Standing Committee on Health and Family Welfare) ஒன்றிய அரசிடம் இந்த அதிகாரப்பூர்வப் பரிந்து ரையைச் சமர்ப்பித்துள்ளது.

பிற முக்கியப் பரிந்துரைகள்

அதிக செலவு பிடிக்கும் சில அரிய வகை நோய்களுக்கு எனத் தனியாகச் சிறப்பு சிகிச்சைத் தொகுப்புகளை உரு வாக்க வேண்டும். அரிய நோய்க ளுக்கான நிதித் தேவையைப் பூர்த்தி செய்யப் பலரிடமிருந்தும் நிதி திரட்டும் கூட்டு நிதி முறையை டிஜிட்டல் தளம் மூலம் ஊக்குவிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் இணைந்து கூடுதல் நிதி யுதவி அளிப்பதற்கான சாத்தியக்கூறு களை ஆராய வேண்டும் உள்ளிட்ட கூடு தல் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.