அயோத்தி ராமர் கோவிலில் 105 திருட்டுச் சம்பவங்கள்
22 Sept 2026, 10:35 pm
<p><strong>அயோத்தி ராமர் கோவிலில் 105 திருட்டுச் சம்பவங்கள்</strong></p><p>புதுதில்லிபிரீமர் மோடி திறந்து வைத்த அயோத்திராமர் கோவில் அறக்கட்டளையில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புவிசாரணைத் குழு (எஸ்ஐடி) 105 திருட்டுச் சம்பவங்களைக் கண்டறிந்துள்ளது. அதாவது சிசிடிவி காட்சிகள், சாட்சியங்களின் அடிப்படையிலான வாக்குமூலங்கள் மற்றும் நன்கொடைப் பதிவேடுகளின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் 105தொடர்புடைய திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளது எஸ்ஐடி விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பானகுற்றப்பத்திரிகை செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் நடைபெற்ற நிதி முறைகேடு குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூலை 2026இல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி,லக்னோ மண்டலஐ.ஜி. கிரண் எஸ் தலைமையில், அயோத்தி டி.ஐ.ஜி சோமன் பர்மா மற்றும் எஸ்.எஸ்.பி கெளரவ் குரோவர்ஆகியோரைக் கொண்ட மறுசீரமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைத் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுதான் ராமர் கோவிலில் நடைபெற்றது ஒரேஒரு நிதி முறைகேடு அல்ல; 105 போலித் திருட்டுச் சம்பவங்களைக் கண்டறிந்துள்ளது. ஒன்றிய அரசின்சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, “எஸ்ஐடிவிசாரணைக்குழு 105 திருட்டுச் சம்பவங்களைக் கண்டறிந்துள்ளது” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
