தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மத நம்பிக்கையின் பெயரால் ராமர் கோவிலில் ஒரு பெரும் துரோகம் செய்த வினைக்கேற்ற பலனை பாஜக அனுபவிக்கட்டும்!

6 Jul 2026, 9:26 pm
மத நம்பிக்கையின் பெயரால் ராமர் கோவிலில் ஒரு பெரும் துரோகம் செய்த வினைக்கேற்ற பலனை பாஜக அனுபவிக்கட்டும்!

மத நம்பிக்கையின் பெயரால் ராமர் கோவிலில் ஒரு பெரும் துரோகம் செய்த வினைக்கேற்ற பலனை பாஜக அனுபவிக்கட்டும்!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வும் ஆதித்யநாத் அரசாங்கமும் மேற் ்கொண்ட தீவிர முயற்சிகளுக்கு மத்தி யிலும், இந்துத்துவாவாதிகளுக்குப் பெரும் அவ மானத்தை ஏற்படுத்தும் வகையிலான பெரிய ஊழல் விவகாரம் ஒன்று வெடித்துள்ளது. கடந்த இருபத்தை ந்து ஆண்டுகாலமாகத் தேர்தல் ஆதாயங்களை அறு வடை செய்வதற்கான வெற்றுப் பணக் காசோலை (blank cheque) போலத் திகழ்ந்த ஆர்எஸ்எஸ் சங் பரி வாரங்களின் மிக முக்கியமான அரசியல் திட்டம், இறு தியில் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அவமா னத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அம்பலப்படுத்தும் விதத்திலும் வெளி வந்திருக்கிறது.

அதிகார மையங்களின் வட்டாரங்களில் ஆர்எஸ்எஸ்சும் அதன் தொண்டர்களும் ஈடுபட்ட திருட்டு மற்றும் முறைகேடுகள் குறித்து இதுவரை மெல்லிய குரலிலேயே பேசப்பட்டு வந்த நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் மூலவருக்கு அளிக்கப்பட்ட ரொக்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன என்பது இப்போது எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி உறு திப்படுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகள் வெளிச்சத்தி ற்கு வந்ததைத் தொடர்ந்து மாநில அரசால் நிய மிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, இந்தத் தொடர் திருட்டுகள் கவனிக்கப்படாமலோ அல்லது மறைக்கப்பட்டு வந்ததையோ சில உண்மைத் தகவல்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகச் செய்திகளின்படி, திருட்டு நடந்திருப்ப தும், திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதி மீட்கப்பட்டி ருப்பதும் முதற்கட்ட விசாரணையிலேயே (prima facie) உறுதியாகியுள்ளது. எனினும், இவ்வளவு நீண்ட காலத்திற்கு இத்தகைய அதிர்ச்சியூட்டும் குற்றச் செயல் யாருடைய கவனத்திற்கும் வராமல் எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரிய வில்லை. 2020-இல் அமைக்கப்பட்ட ‘ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை’யின் உயர் பொறுப்பி லுள்ளவர்களுக்குத் தெரியாமலேயே இது நடந்திருக்க முடியுமா என்பதும் மற்றொரு கேள்வியாக எழுந் துள்ளது.

மத உணர்வு சுரண்டலும் அரசமைப்பு நிறுவனங்களின் பொறுப்பும்

நிச்சயமாக, “இறைவனுக்கு” அர்ப்பணிக்கப்பட்ட பணம் மற்றும் ஆபரணங்களைத் திருடுவது என்பது ஒரு தீவிரமான குற்றச்சாட்டுதான். ஆனால், லட்சக்க ணக்கான மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைப்பது அதைவிட மிகத் தீவிரமான ஒன்றாகும். ராம ஜென்மபூமி இயக்கத்தின் வரலாறு இப்போது தெளிவாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில், அரசியல் கருத் துக்களைத் தீர்மானிப்பதில் இல்லாவிட்டாலும், பொது மக்களின் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில், “நம்பிக் கை”க்கு உள்ள பங்கை யாரும் மறுக்க முடியாது.

ஒரு வகையில், ராம ஜென்மபூமி கோவில் என்பது பாஜக மற்றும் இந்துத்துவக் குழுக்களின் கொள்கை ரீதியான வழிகாட்டி சக்தியாகத் திகழ்ந்தது. அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களுக்காக மக்களின் மத உணர்வுகளை உச்சகட்ட அளவில் பயன்படுத்திக் கொண்டதே கடந்த கால நிகழ்வுகளின் மிக முக்கிய அம்சமாக இருந்தது. ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மற்றும் ஏன் நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை கூட, இத்த கைய அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அறக்கட்டளை உருவாக்கமும்

கோவில் கட்டுவதற்கான நிலம் ஒரு நாசவேலை க்கு பின்னரே கையகப்படுத்தப்பட்டது என்பது, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தனது உத்தரவில் ஒப்புக்கொண்ட ஓர் உண்மையாகும். அந்த உத்தரவில் இருந்த சந்தேகத்திற்குரிய தன்மையும், அப்பட்டமான முரண்பாடுகளும், நீண்ட காலமாக நீடித்த சட்டப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் நீதி கிடைக்கவில்லை என்பதை உணர வைத்தன.

நீதிபதி சந்திரசூட் கூட தனது உத்தரவைச் சட்டரீதி யாகவோ அல்லது அரசமைப்புச் சட்ட ரீதியாகவோ நியாயப்படுத்தத் துணியவில்லை! எனவே, அதே நாசவேலையில் ஈடுபட்டவர்களிடமே அந்த நிலத்தின் உரிமையை ஒப்படைப்பதை, அவர் அந்தத் தெய்வத்தின் ‘தெய்வீகத் தலையீடு’ என்ற அடிப்படை யில் நியாயப்படுத்தினார். மேலும், ஒன்றிய அரசு ஓர் அறக்கட்டளையை உருவாக்குவதற்கும் உச்ச நீதிமன்றம் வழிவகுத்தது. கோவில் கட்டுமானம் மற்றும் அதன் அன்றாட நிர்வாகம் தொடர்பான பணிகளைத் தன்னாட்சியுடன் மேற்கொள்ளும் வகை யில், அந்த அறக்கட்டளை உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அது ஒன்றிய அரசுக்குக் குறிப்பாக உத்தரவிட்டது.

அதிகாரக் குவிப்பும் சுயேச்சைத் தன்மையற்ற கட்டமைப்பும்

ஆனால், எந்தவொரு நடுநிலை பார்வையாள ருக்கும், தன்னைத்தானே சுயம்சேவக் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஒருவர் பிரதமராக இருக்கும் நிலையில், மோடி ஆட்சியின் கீழ் சுயேச்சை யான அமைப்பு அல்லது அறக்கட்டளை என்பது ஒரு மாயை - ஒரு முரண்பாடான விஷயம். எனவே, இந்த அறக்கட்டளையில் ஆர்எஸ்எஸ் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு மைய இடத்தைப் பிடித்துள்ளது. சில வர்ணனையாளர்கள் குறிப்பிடுவது போல, அது ‘பணிப் பங்கீடு’ என்ற கொள்கையைக் கொண்டுள் ளது. அத்தகைய பங்கீட்டின் கீழ், ராம ஜென்மபூமி போ ராட்டத்தை முன்னின்று நடத்திய விஸ்வ ஹிந்து பரி ஷத்திற்கு, இதற்கான வெகுமதியும் வாய்ப்புகளும் கிடைத்தன.

எனவே, அறக்கட்டளையின் அமைப்பு என்னவாக இருக்கும் என்பதை எவரும் யூகிக்கலாம். அதில் நியமிப்பதற்காக அவர்கள் தேர்வு செய்த கையாட்க ளில், ஒன்றிய அரசின் சார்பில் தற்போதைய தலை மைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமாரின் பெயர் கூட இருந்தது; இதுவே தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை விளக்கப் போதுமானது. ஆர்எஸ்எஸ்-பாஜகவின் பங்களிப்பு என்பது அறக்கட்டளையை அமைப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. கோவில் கட்டுமானப் பணிக ளைத் தொடங்கி வைத்தல், மூலவர் பிரதிஷ்டை மற்றும் கொடியேற்றம் ஆகிய நிகழ்வுகள் அனைத்திலும் பிரதமரே முன்னின்று தலைமை தாங்கினார்.

ஆழ்ந்த மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வில் நரேந்திர மோடி வகித்த இத்தகைய முக்கியப் பங்கு, சங்கராச்சாரியார்கள் சிலரிடமிருந்தே கூட வியப்பையும் கேள்விகளையும் எழுப்பியது. மோடி யின் 12 ஆண்டுகால ஆட்சிக் கால ‘சாதனைகள்’ குறித்த அதிகாரப்பூர்வப் பட்டியலில், அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோவிலைக் கட்டியெழுப்பியதும் நிச்சயமாக இடம்பெறும். இத்தகைய விவரிப்பானது, ‘மத நம்பிக்கையின் தலை வர்’ மற்றும் ‘அரசியல் அதிகாரத்தின் தலைவர்’ ஆகிய இரு பாத்திரங்களும் பிரதமரின் ஒரே ஆளுமையில் ஒன்றிணைந்திருப்பதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.

பிரதமரின் மௌனமும் நீதித்துறை விசாரணையின் அவசியமும்

எனினும், இப்போது பிரதமர் மௌனம் காத்து வரு கிறார். தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் மூலமா கக்கூட இந்தத் திருட்டு குறித்த தனது ‘வருத் தத்தை’ அவர் பதிவு செய்யவில்லை! இருப்பினும், தற்போதைய இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. 2020ஆம் ஆண்டி லேயே, கோவில் கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பே, அந்தத் திட்டத்தின் கணக்குப் பராமரிப்பு முறை குறித்து ஒரு தணிக்கை கேள்வி எழுப்பி யதாகக் கூறப்படுகிறது. அவரது ஆட்சியின் மற்ற பரிச்சயமான அம்சங்களும் தெளிவாகத் தெரிந்தன: வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய எதுவும் இல்லை; பிரதான ஊடகங்கள் இந்த விஷயத்தை மூடிமறைக்க மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கு மத்தியிலும், தற்போது வெளிவரும் அறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

எந்தவொரு கண்காணிப்பு அமைப்போ அல்லது விழிப்புணர்வு அமைப்போ அங்கு நடைமுறையில் இல்லை என்பது தெளிவாகிறது. இப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவருக்கும் சட்டரீதியான தற் காப்புக்கான வாய்ப்பு கிடைக்கக்கூடாது என்று அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் உரக்கக் குரல் கொடுத்து வருகிறது. இவ்வளவு மோசமான நிகழ்வு கள் நடந்தபோதும், முன்னதாக இது குறித்து எந்தவிதமான சலசலப்போ அல்லது எதிர்ப்புக் குரலோ கூட எழவில்லை. திருட்டுச் செயலைச் செயல் படுத்த ஏதுவாக சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. உயர் மட்டத்திலானவர்களின் உடந்தையின்றி இவை யெல்லாம் நடந்திருக்க முடியுமா?

தொடக்கத்தில் மாநில அரசு இதுகுறித்த செய்திக ளைப் புறக்கணிக்க முயன்றாலும், பின்னர் காவல் துறையின் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கவும் நிர்பந்திக் கப்பட்டது. ஆனால், பிரதமரும் முதலமைச்சருமே அந்த அறக்கட்டளையுடன் நெருங்கிய தொடர்பு டையவர்களாக இருப்பதால், எந்தவொரு நிர்வாக ரீதி யிலான விசாரணையும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியாது. எனவே, ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி தேர்தல் வெற்றிகளையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்ளக் காரணமாக விளங்கும் லட்சக் கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை மதித்து, உட னடியாக ஒரு நீதித்துறை விசாரணைக்கு உத்தர விடப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியும் நமது அரச மைப்புச் சட்டக் கட்டமைப்பும் கோரும் குறைந்த பட்ச நடவடிக்கை இதுவேயாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஜூலை 5, 2026 தமிழில் சுருக்கம் : ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.