தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அயோத்தி ராமர் கோவிலில் பல கோடி ரூபாய் முறைகேடு: ஆர்எஸ்எஸ், சங்பரிவார் கும்பலை கைது செய்யக்கோரி சிபிஎம் தர்ணா

16 Jul 2026, 9:41 pm
அயோத்தி ராமர் கோவிலில் பல  கோடி ரூபாய் முறைகேடு: ஆர்எஸ்எஸ், சங்பரிவார் கும்பலை கைது செய்யக்கோரி சிபிஎம்  தர்ணா
<p><strong>அயோத்தி ராமர் கோவிலில் பல கோடி ரூபாய் முறைகேடு: ஆர்எஸ்எஸ், சங்பரிவார் கும்பலை கைது செய்யக்கோரி சிபிஎம் தர்ணா </strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 16- அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணியில் நிலக்கைய கப்படுத்தல், நன்கொடைகள் வசூலிப்பில் முறைகேடு, நகைகள் கொள்ளை என பல கோடி ரூபா யைச் சுருட்டிய ஆர்எஸ்எஸ் சங்பரி வார் கும்பலை கைது செய்ய வேண்டும். இதற்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச பாஜக முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன்பு வியாழனன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு குமரி மாவட்ட செயலாளர் என். எஸ். கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆட்சியில் நியாயமான விசா ரணை சாத்தியமற்றது என்பதால் அவர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில், காலவரையறைக்கு உட்பட்ட சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். காணிக்கைத் திருட்டு மற்றும் நில ஊழல் மூலம் முறைகேடாக ஈட்டப்பட்ட அனைத்துப் பணமும், சொத்துகளும் உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த ஊழல் மூலம் பலனடைந்த அனைத்து அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பெயர்களை எவ்வி தப் பாகுபாடுமின்றி பொதுவெளி யில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். தற்போதுள்ள ஊழல் மலிந்த ராமர் கோவில் அறக்கட்டளையை உடனடியாகக் கலைத்துவிட்டு, முறையான, வெளிப்படையான அரசு நிறுவன நிர்வாக முறையைக் கொண்டு வரவேண்டும் என்று பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம் .அகமது உசேன், எம்.அண்ணாதுரை ஆர்.ரவி, விஜய மோகன் நாகர்கோ வில் மாநகர செயலாளர் எஸ்,அரு ணாசலம் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.